2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இஸ்ரேலுக்கு எதிராக கிண்ணியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.அப்துல் பரீத்


இஸ்ரேலிய படையினரால் காஸா முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டுழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிண்ணியா ஜெம்மியத்துல் உலமா சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்     இன்று வெள்ளிக்கிழமை ஜம்ஆ தொழுகையின் பின்னர்; நடைபெற்றது.

கிண்ணியாவின் பிரதான பள்ளிவாசல்களில் இருந்து ஊர்வலமாக சென்ற மக்கள், கிண்ணியா நகர சபை மைதானத்தில் ஒன்று கூடி பொதுக்கூட்டம் ஒன்றையும் நடாத்தினர்.

இங்கு இஸ்ரேலுக்கு எதிராக  உலமாக்களால் உரையாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக விசேட பிராத்தனையும் இடம்பெற்றது.

கூட்டத்தின் நிறைவில் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பதற்காக மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹரூப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X