2026 மார்ச் 30, திங்கட்கிழமை

சடங்கின்போது உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் குடும்பஸ்தர் மரணம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாந்திரீகச் சடங்கின்போது உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் குடும்பஸ்தர் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராசா சத்தியசீலன் (வயது 26) என்பவரே இவ்வாறு மரணமடைந்ததாக கிராம சேவையாளர் ஜீவராணி லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றிரவு வெள்ளிக்கிழமை (01) வட்டவன் எனுமிடத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சமயச் சடங்கில் இவர் உருவேற்றப்பட்டு தெய்வமாடிய நிலையில் மூர்ச்சையாகி விழுந்து சற்று நேரத்தில் இறந்து விட்டதாக இறந்தவரின் மனைவி ஸ்ரீகலா பொலிஸ் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.

சடலம்  தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக அலிஒலுவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .