2026 மார்ச் 30, திங்கட்கிழமை

இந்திய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


மூதூர் கிழக்கு நவரெத்தினபுரம் கிராமத்தில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள   வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(8) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வன் சிங்ஹா கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீளக்குடியமர்ந்த கூனித்திவு கிராம சேவகர் பிரிவில 67 வீடுகளும், நவரெத்தினபுரம் 114, சூடைக்குடா 62 வீடுகள் இங்கு அமைக்கப்பட்ட உள்ளன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், திருகோணமலை மேலதிக  அரசாங்க  அதிபர் எஸ்.அருள்ராசா, மூதூர் பிரதேச செயலாளர் பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வீடுகளை அமைப்பதற்கு  தலா  550,000 ரூபாய் ஒதுக்கப்பட்டடுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .