2026 மார்ச் 30, திங்கட்கிழமை

இ.த.க.யின் திருமலை. கிளைக்கான கட்சி கூட்டம் பிற்போட்டப்பட்டது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை தமிழரசுக் கட்சி, திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான கட்சி புனரமைப்புக் கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும் எதிர்வரும் திங்கட்கிழமை(25)க்கு பிற்போடப்பட்டுள்ளதாக திருகோணமலை கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

கட்சிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (22)  நடைபெறவிருந்தது. இந்நிலையிலே எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

மேலும், சேருவில தொகுதிக்கான கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும் சனிக்கிழமை (23) காலை 10.00 மணிக்கு ஈச்சிலம்பற்று பிரதேச சபை கேட்போர்கூடத்திலும் மூதூர் தொகுதிக்கான புனரமைப்புக் கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு  பட்டித்திடல் மத்திய வீதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்திலும் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் புதன்கிழமை (27) காலை 10.00 மணிக்கு நகரசபை வளாகத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .