2026 மார்ச் 30, திங்கட்கிழமை

தமிழீழ நிர்வாகம் மறைமுகமாக இயங்கியது: கிழக்கு மாகாண ஆளுநர்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

'நான் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆரம்பகாலத்தில் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்துக்கு  சமாந்திரமாக மறைமுகமாக தமிழீழ நிர்வாகம் இந்த மாகாணத்தில்  இருந்தது' என கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஐயவிக்கிரம தெரிவித்தார்.

திருகோணமலையில் சனிக்கிழமை(6) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'அன்றைய காலகட்டத்தில் மாகாண அரச நிர்வாகம் எவ்வாறு நடைபெறவேண்டும் நிர்வாக ரீதியில் என்ன தீர்மானங்கள் மேற்கொள்ளவேண்டும், அதில் எவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதனை அந்த மறைமுக நிர்வாகமே தீர்மானித்துக்கொணடிருந்தது.

அத்துடன் ஆளுநரும் மாகாணசபையும் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும் அவர்களே தீர்மானங்களை மேற்கொண்டார்கள்.

தெளிவாக கூறுவதாயின் அப்போதிருந்த மாகாண செயலாளர்கள் எந்தவொரு நிர்வாக ரீதியான தீர்மானங்களையும் மேற்கொள்ளும்முன்னர் வன்னிக்கும் முல்லைத்தீவுக்கும் சம்பூருக்கும் சென்று வந்தனர்.

அங்கிருந்தவர்களின் தீர்மானங்கள் இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நாட்களை நான் இப்போதும் நினைவுகூறுகிறேன்.

உலக அளவில் நோக்கும்போது நமது நாட்டில் மிகச் சிறந்த அரச நிர்வாக அமைப்பு காணப்படுகின்றது. காரணம் இங்கு 17 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அரச அலுவலர்கள் உள்ளனர்.

நமது நாடு அண்மைக்காலமாக பல நாடுகளால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. சில நாடுகள் எமது நாட்டின் துரித அபிவிருத்திகளை பாராட்டுவதில்லை, மாறாக நமது அபிவிருத்திகளை பார்த்து கோபமடைகின்றார்கள். அவர்கள் அவற்றை விரும்புவதில்லை.

மேலும் சிலர் நமது நாட்டின் சமாதான சூழலை பார்த்து பொறாமை அடைகின்றனர்.

பலர் நமது சமாதான சூழலை குழப்ப விரும்புகின்றார்கள். நமது நாட்டில் தலையிட முயற்சிக்கின்றார்கள். இவற்றுக்கு இடங்கொடுத்து மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் நாட்டை தள்ளி விடமுடியாது' என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • sivanaathan Sunday, 07 September 2014 12:07 PM

    இடம் பெற்ற நிகழ்வு எது என்பதை குறித்திருந்தால் நன்றாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .