2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அல் மத்ரசதுல் காதரிய்யா மக்தப் பிரிவின் ஆரம்பவிழா

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா அல் மத்ரசதுல் காதரிய்யா மக்தப் பிரிவின் ஆரம்பவிழா காதரிய்யா கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

மக்தப் பொறுப்பாசிரியர் ஏ.டபள்யு. ஆரிப் மௌலவி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், திருகோணமலை மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல், கிண்ணியா ஜெம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ஏ.ஆர்.நஸார் மௌலவி உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மக்தப் சமயக் கல்விபிரிவின் நோக்கம், அதன் செயற்பாடுகள், அதன் வெற்றிக்கு பெற்றாரின் பங்களிப்பு, சமயக் கல்வியின் முக்கியத்துவம் என்பன தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இப்பிரிவின் பாடநெறிகள் இன்று(09) ஆரம்பிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X