2026 மார்ச் 30, திங்கட்கிழமை

தமிழ் பேசும் சமூகங்கள் நிர்வாக சேவையில் குறைவாக உள்ளோம்: தௌபீக்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.அப்துல் பரீத்


'இன்று இந்த நாட்டில் தமிழ் பேசும் சமூகங்களான நாங்கள், நிர்வாக சேவையில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் மிக குறைந்த அளவிலே இருக்கின்றோம் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியாப் பிரதேசத்தில் இவ்வாண்டில் இலங்கை நிருவாக சேவை (எஸ்.எல்.ஏ.எஸ்.) போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவோரின் நலன் கருதி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கின் அணுசனையுடன் முற்றிலும் இலவசக் கருத்தரங்கொன்று இன்று சனிக்கிழமை (20) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட காரியலாயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் எங்கள் சமூகம் மிக அறிதாகவே காணப்படுகின்றன.

இந்நிலைமையை கருதிக் கொண்டு இவ்வாறான கருத்தரங்கொன்றை முதன் முதலாக முற்றிலும் இலவசமாக நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இதுபோன்று நாங்கள் இனி தொடர்ச்சியாக இந்த நாட்டில் என்ன பரீடசைகள் இருக்கின்றதோ, அத்தனை பரீட்சைக்கும் மாணவர்ளை தயார் படுத்துவதற்கும் நாம் ஆயத்தமாகவுள்ளோம். அதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஹது, வீடமைப்பு அதிகாரசபை திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.பாயிஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.எச்எம்.சனுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .