2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

போட்டோ பிரதி இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட எட்டு பாடசாலைகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், இன்று (28) போட்டோ பிரதி இயந்திரங்களை வழங்கி வைத்தார்.
 
கிராமங்களுக்கு தொழில் நுட்ப வசதியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இப் பிரதேசத்தில் வசதி குறைந்த பாடசாலைகளுக்கு இவ் இயநதிரங்கள் வழங்கப்பட்டன.
 
கிண்ணியா அந் நஜாத் மகா வித்தியாலய கேட்போர்கூடத்தில் அதிபர் ஏ.சி.நசீம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி உட்பட அதிபர்கள் கல்வி அதிகாரிகள் என் பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .