2026 மார்ச் 28, சனிக்கிழமை

காலங்கடந்த திருமணப்பதிவுச் சான்றிதல் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 நவம்பர் 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

காலம் கடந்த திருமணப்பதிவுச் சான்றிதல் வழங்கும் நிகழ்வு பாட்டாளிபுரம் கிராமத்தில்  செவ்வாய்கிழமை(11)  நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  25 சோடிகள் கலந்துகொண்டு தங்கள் திருமணச் சான்றிதழை  பெற்றுக்கொண்டனர்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நிதி உதவியின் மூலம் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மூதூர் பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர்  கிருஸ்ணபிரியன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் நிலையத்தின் சட்டத்தரணியான முகம்மது லத்தீப் பைஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  சட்டத்தரணி அனஸ் ருக்ஸானா பானு, செல்வி.சுபாஜினி திட்ட உத்தியோகத்தர் கோபிகண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .