2026 மார்ச் 28, சனிக்கிழமை

சாவாற்றில் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திலுள்ள சாவாற்றில் காணாமல் போனவரின் சடலம் புதன்கிழமை (03) மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா, மகருக்  கிராமத்தைச் சேர்ந்த  07 பிள்ளைகளின் தந்தையான ஏ.டபிள்யூ.பிர்தௌஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர்  தனது மாட்டுவண்டியுடன் சாவாற்றை திங்கட்கிழமை (01) கடக்க முற்பட்டார். இதன்போது, ஆற்றில்  கடுமையான நீரோட்டம் காணப்பட்டதால்,  இவர் மாட்டுவண்டியுடன் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இறந்த 02 மாடுகளும் மாட்டுவண்டியும்  திங்கட்கிழமையே (01) மீட்கப்பட்டதாகவும் இவரது சடலம் புதன்கிழமையே (03) மீட்கப்பட்டதாகவும்  பொலிஸார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .