Kogilavani / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்,-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்; கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை புதன்கிழமை (11) நடத்தனர்.
உட்துறைமுக வீதியில் அமைந்தள்ள இந்து கலாசார மண்டப வளாகத்தில் காலை 9.00 மணிக்கு ஒன்று கூடிய இவர்கள், காலை 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக கிழக்கு ஆளுநர் அலுவலகம் நோக்கி சென்றனர். அங்கு அலுவலகத்தின் முன்னால் கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈச்சிலம்பற்று, மூதூர், குச்சவெளி, திருகோணமலை, தம்பலகாமம், மொரவேவ ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிகமான தொண்டர் ஆசிரியர்கள்; இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேற்படி ஆசிரியர்கள், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளில் எவ்வித வேதனங்களும் இன்றி Nவையாற்றி வருவதாக தெரியவருகின்றது.
அரசின் நியமனங்களிலும் இவர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லையென்றும் கிழக்கு மாகாண முதல் அமைச்சராலும் நியமனங்கள் பெற்றுகொடுக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்கள் இதன்போது தெரிவித்தனர்.
எனவே புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தங்கள் மீது கவனம் செலுத்தி நிரந்தர நியமனம்; வழங்க ஆவண செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
இதன் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சென்று ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
27 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago