2026 மார்ச் 28, சனிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தமிழ்நாடு, சென்னை தன்வந்திர் ரொட்டறி கழக உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் திருகோணமலை, ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்;பக மகா வித்தியாலயம் மற்றும் மாவடிச்சேனை அ.த.க.பாடசாலை ஆகியவற்றுக்கு கற்றல் உபகரணங்களை செவ்வாய்க்கிழமை (17) வழங்கி வைத்தனர்.

திருகோணமலை ரொட்டறி கழக உறுப்பினர்களின் அழைப்பில் விஜயம் செய்த இக்குழுவினர் குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கு 01 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

தன்வந்திர் ரொட்டறி கழக தலைவர் அ.செந்தில்குமார் தலைமையில் ரொட்டேரியன் தனேஸ்கர் ரொட்டேரியன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இவ் உபகரணங்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .