Kanagaraj / 2015 மார்ச் 03 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
திருமோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக என்.ஏ.ஏ.புஷ்பகுமார தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலை கண்டி வீதி 4 ஆம் மைல் கல்லில் அமைந்துள்ள அரசாங்க அதிபர் பணிமனையில் சர்வமத ஆசீர்வாதத்துக்கு பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாகச் சேiயைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியான இவர், 1985 ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டு,அரச சேவையில் 30 வருட கால அனுபவத்தைப் பெற்றவர்.
அரசாங்க அதிபராக நியமனம் கிடைப்பதற்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகக் இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
8 hours ago