2026 மார்ச் 28, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 06 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

வெருகல் பிரதேச செயலக பிரிவில் உள்ள வட்டவான் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், புதன்கிழமை (04) வழங்கி வைக்கப்பட்டது.  

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 165 குடும்பங்களுக்கு 'மறுவாழ்வுக்கழகம் கனடா' அனுசரணையில் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

வட்டவான் பல்தேவை கட்டடத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் இந்நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண உறுப்பினர் கு.நாகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .