Thipaan / 2015 மார்ச் 10 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா தோனா கடற்கரைப் பகுதியிலுள்ள மீன் சந்தையில், விற்பனைக்கு வைத்திருந்த மனித பாவனைக்கு உதவாத 150 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்களை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(10) கைப்பற்றி அழித்துள்ளனர்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு இம் மீன்கள் கைப்பற்றப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் முகம்மட் றிஸ்வி தெரிவித்தார்.
பழுதடைந்த நிலையில் உள்ள மீன்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் புதிய மீன்களையும் மக்கள் குறைந்த விலையில் மக்கள் கேட்கின்றனர். இதனால் புதிய மீன்களை வி;ற்கும் தாங்கள் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பழுதடைந்த நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.றிஸ்வி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பழுதடைந்த மீன்கள் புதைக்கப்பட்டுள்ளன.
49 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
4 hours ago