Thipaan / 2015 மார்ச் 11 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் குறைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் மு.கா செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.எம்.ஹஸன்அலி திருகோணமலை மாவட்டத்துக்கான விஜயமொன்றை செவ்வாய்கிழமை(10) மேற்கொண்டிருந்தார்.
இவர் தோப்பூர், கிளிவெட்டி, மூதூர், கிண்ணியா, திருகோணமலை, நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை ஆகிய வைத்தியசாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து வைத்தியசாலைகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்ததோடு வைத்திய அதிகாரிகள் வைத்தியசாலை நலன்புரிச்சஙக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் நடந்த விசேட கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி மாவட்ட வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
குறிப்பாக குச்சவெளியில் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஒரு கிராமிய வைத்தியசாலையை நம்பியே வாழ்கின்றார்கள் இங்கு வைத்தியர் ஒருவர் மாத்திரமே சேவையாற்றி வருகின்றார்.
இவ்வைத்தியசாலையில் பல் வேறு குறைபாடுகள் உள்ளன. இதனைத் மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துக்கூறப்பட்டது.
கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் இவ்வைத்தியசாலை விடயத்தில் கவனமெடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக இதன் போது தெரிவித்தார்.
மனிதவள குறைபாடு, களவைத்தியசாலைக்கான காணி, அப்புலன்ஸ் வண்டி வாகனத்தேவைப்பாடு கட்டடம் திருத்த வேலைகள் மற்றும் தளபாடம் போன்ற விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,
திருகோணமலை பொது வைத்தியசாலை அபிவிருத்திக்கென 185 மில்லியன் ரூபாய் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியாவுக்கு 4 மில்லியன் திருத்த வேலைக்காகவும் ஒதக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் செய்யவேண்டிய உடனடித் தேவைப்பாடுகள் அவசரமாக நிறைவேற்றித்தருவதாகவும் ஏனைய பாரிய வேலைத்திட்டங்களை தேர்தலின் பின்னர் செய்து தருவதாக உறுதியளித்தார்.


3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago