Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
12 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்பிறப்பாக்கியை திருடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை இம் மாதம் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரையும் மூதூர் மாவட்ட நீதிமன்றில், வெள்ளிக்கிழமை (13) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மூதூர் கிழக்கு சம்பூர் பிரதேசத்தில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்பிறப்பாக்கியை திருடிய இருவரை வியாழக்கிழமை மாலை சம்பூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சம்பூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.கே.ஏ.சவாஹிர்; தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சந்தோசபுரத்தை சேர்ந்தவர் எனவும் ஒருவர்; கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago