Gavitha / 2015 மார்ச் 28 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
பிரதேச மக்களின் தேவைகளை அடையாளப்படுத்தி காலத்தை கடத்தாது சிறந்த அரச சேவையினூடாக அதனை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற பொது மக்களுக்கான நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி திருமதி யோகேஸ்வரி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஒரு காலத்தில் அரச சேவைக்கும் பொது மக்களுக்குமான இடைவெளி நீண்டதாக காணப்பட்டது. தற்போது அவைகள் மாற்றமடைந்து இன்று அனைத்து சேவைகளும் மக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டு, விரைவாக பொது மக்களின் கலடிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன.
இதனை பொது மக்கள் சந்தர்ப்பமாக கொண்டு, தமது தேவைகளை பெற்றுக்கொள்வதுடன் அரச அதிகாரிகளும் தம்மை நாடி வருகின்ற பொது மக்களுக்கு காலத்தை கடத்தாது, துரிதமாக சேவைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும். இதன்போது. அரசு எதிர் பார்க்கின்ற உயர்வானதும நிலையானதுமான மாற்றங்களை பொது மக்களின் வாழ்வியலில் ஏற்படுத்த முடியும்' என்று தெரிவித்தார்.
இந்த நடமாடு சேவையின் கீழ் திருக்கோவில் பிரதேச மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், காணியளிப்புக்கள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதந்த 2,000ஆம் ரூபாய் கொடுப்பனவு முத்திரைகள், விசேட தேவையுடையோர்களுக்கான மாதாந்த 3,000 ரூபாய் வாழ்வாதார கொடுப்பனவுகள் என்பன வழங்கப்பட்டது.
மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் பொலிஸ் சான்றிதழ்கள் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் ஏனைய முறைப்பாடுகளுக்கு விரைவாக தீர்வுகளும் வழங்கப்படவுள்ளது.

15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago