Princiya Dixci / 2015 ஏப்ரல் 06 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்
ஹட்டன் நெஷனல் வங்கியின் கிராமிய எழுச்சி வாழ்க்கையை வெற்றி கொள்ள வழிகாட்டும் புத்தாண்டுச் சந்தை, திருகோணமலை, முற்றவெளி விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.
ஹட்டன் நெஷனல் வங்கியின் திருகோணமலை மாவட்ட கிளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த புத்தாண்டுச் சந்தை 'வாழ்க்கையை வெற்றி கொள்ள வழிகாட்டும் புத்தாண்டு சந்தை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.
15 வாடிக்கையாளர்களுக்கு தலா 300,000 ரூபாய்கள் பெறுமதியான சுயதொழில் முயற்சிக்கான கடன்கள் இதன்போது வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அபிவிருத்தி வங்கிப்பிரிவின் பொறுப்பாளர் லசந்த பெனான்டோவும் கௌரவ விருந்தினராக கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெயராஜாவும் சிறப்பு விருந்தினராக கிழக்கு பிராந்திய மத்திய வங்கி முகாமையாளர் தர்ம கீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.





14 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago