Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாயக்கல்லூரி கிழக்கு மாகாணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.
பாலமுனையில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரிக்கு 2015—2016 கல்வி ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் திங்கட்கிழமை (6) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழ்மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியினூடாக விவசாயத்துறை சார்ந்த கல்வி ரீதியிலான அதிக வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்தக் கல்லூரியின் வளர்ச்சி, கல்லூரியின் முன்னேற்றம் மாணவர்களாகிய உங்களது கைகளிலேயே தங்கியுள்ளது.
எனவே மாணவர்கள் காட்டும் ஒத்துழைப்பிலும் கூட்டுப்பொறுப்பிலும் இந்தக் கல்லூரி எதிர்காலத்தில் ஏனைய விவசாயக்கல்லூரிகளைவிட சிறந்து விளங்குவதுடன் இந்த நாட்டில் உயர்ந்து விளங்கும் ஒரு கல்லூரியாக திகழ வேண்டும்.
இந்தக் கல்லூரியில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருப்பதையிட்டு சந்தோஷமடைகின்றேன். இன ஒற்றுமையூடாக இந்த கல்லூரியின் கல்வி வளர்ச்சி கட்டியெழுப்பப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாலமுனை விவசாயக் கல்லூரி அதிபர் எம்.எப்.அஹமட் சனீர், குண்டகசாலை விவசாய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் விவசாய பணிப்பாளருமானஆர்.சிவனேசன், கல்லூரி விரிவுரையாளர்களான எஸ்.எல்.இக்பால், ஏ.பேரின்பராசா, எம்.எஸ்.எம்.இம்தியாஸ் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago