Kogilavani / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றாடல் பாதுகாப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை காலை (9) மணியளவில் பிரதேச செயலாளர் ஜனாப்.எம்.ஏ.அனஸின் தலைமையில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேசத்தின் ஈரநிலக் குழுக்களை மீளமைதல், திண்மக் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்களை கரையோரங்களில் இருந்து அகற்றுதல் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துறையாடப்பட்டதுடன் அதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
மேலும் சுற்றாடல் பாதுகாப்பு குழுக் கூட்டத்தை ஒவ்வொறு மாதமும் கூட்டுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது,
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், இபாட் நிறுவனத்தின் ஏற்பாட்டாளர், வனவளப் பாதுகாப்பு அதிகாரி, நகர சபை மற்றும் பிரதேச சபை பிரதிநிதிகள், சுற்றாடல் உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
13 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago