2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இணையம் மூலம் வருமான அனுமதி பத்திரம் வழங்கு செயற்றிட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் வாகன உரிமையாளர்களுக்கு வருமான அனுமதி பத்திரத்தை இணையம் ஊடாக வழங்கும் செயற்றிட்டத்தை வெள்ளிக்கிழமை (10)  அங்குராப்பணம் செய்து வைத்தனர்.

உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, முதல் அமைச்சர் நசீர் அகமட், கல்வி கலாசார இளைஞர் விவகார அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வீதி, போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலபதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் முதலாவது அனுமதி பத்திரத்தை கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மோட்டார் வாகன உரிமையாளர் ஒருவருக்கு வழங்கி வைத்தார்.

இத்திட்டம் 2020ஆம் ஆண்டில் ஒரே அரசாங்கம் எனும் குறிக்கோளில் கொண்டு வரப்பட்டுள்ளது. நான்காவது கட்டமாக கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதி பத்திரத்தை இலத்திரனியல் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். றறற.அழவழசவசயககiஉ.றி.பழஎ.டம
என்னும் இணைய தளத்தின் ஊடாக கடன் அட்டை மூலமாக பணத்தை செலுத்தி வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன் உண்மை (மூலம்) பிரதி 14 நாட்களுக்குள் வாகன உரிமையாளரின் முகவரிக்கு தபால் மூலமாக திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X