2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலையில் நீண்டகாலமாக வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தரவுகளுடன் ஜனாதிபதியின் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயலணியிடம் சமர்ப்பிக்கும் முகமாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், 'மக்களுடைய காணி தொடர்பான பிரச்சினைகள், உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள், காணாமல் போனோருடைய பிரச்சினைகள், விதவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,  பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள்,  வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள்  போன்ற பல பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன.

இவற்றின் உண்மையான தரவுகளை சேகரித்து இந்த செயலணியிடம்  சமர்ப்பித்து எமக்கு நியாயமான தீர்வுகளை ஏற்படுத்த முயற்சிப்போம். இதற்காக திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இன்றிலிருந்து 10 தினங்களில் இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து தரவுகளுடன் ஆவணப்படுத்தி வழங்குமாறு கோரியதுடன், இதன் பொறுப்புக்களும் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்த முடிவு செய்து இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X