Princiya Dixci / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான சுபிநய் நந்தி, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (22) சந்தித்தார்.
இடம்பெயர்ந்து வாழும் சம்பூர் பிரதேச மக்களின் நிலைமை, அவர்களது மீள் குடியேற்றம், மாவட்டத்தின் பொதுவான நிலைமைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்களைப் பற்றி ஐ.நா. அதிகாரி அரச அதிபரிடமிருந்து கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பின் போது அரசாங்க அதிபருடன் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனும் கலந்துகொண்டார்.
வெகுவிரைவில் சம்பூர் அகதி மக்கள், தமது சொந்த நிலத்துக்குத் திரும்பும் நடவடிக்கைகள் நிருவாக மட்டத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் புஷ்பகுமார ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்தார்.
ஐ.நா. அதிகாரிகள் குழு, மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளதோடு சம்பூர் உட்பட கோணேஸ்வரம் மற்றும் கன்னியா ஆகிய பிரதேசங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்யவுள்ளனர்.
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago