Gavitha / 2015 ஏப்ரல் 23 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்
பௌத்த விகாரைக்கு தானமாக வழங்கப்பட்ட 14 கால்நடைகளை அனுமதிப்பத்திரமின்றி கதிர்காமத்தில் இருந்து கல்முனைக்கு லொறி ஒன்றில் எடுத்துச் சென்ற இருவரை வியாழக்கிழமை (23) கைது செய்ததுடன் கால்நடைகளையும் கைப்பற்றியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி, பாலமுனை பிரதேசத்தில் வீதி போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து லொறியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் 14 கால்நடைகள் மற்றும் அவற்றை கொண்டு வந்த லொறி என்பன மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கொண்டு வரப்பட்ட கால்நடைகளில் (பிங்) அடையாளம் இடப்பட்டிருந்ததால், பௌத்த விகாரைக்கு அல்லது ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago