Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
திருகோணமலை, மூதூர் கங்குவேலி புளியடிச்சோலை விவசாய சம்மேளன கட்டட திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை மாலை விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.செல்வராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.தமிழ்ச்செல்வன், எஸ்.மோகன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் தொகுதிக் கிளைச் செயலாளர் எஸ்.தர்சன், சேருவில நீர்ப்பாசண திணைக்கள அதிகாரி ஜனாப்.எஸ்.முபீஸ் ஆகியோருடன், சம்மேளனத்தின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மேளனத்திற்கென புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டடத் தொகுதி அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், தென்னங்கன்றை விவசாய அமைச்சர் நாட்டி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற அகத்தியர் ஸ்தாபனம் சிவன் கோவிலை சென்று பார்வையிட்டார்.
15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago