Gavitha / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்
ஐந்து வயதுக்கு குறைந்த போஷாக்கு குறைபாடு உள்ள 614 குழந்தைகளுக்கு, போஷாக்கு பிஸ்கட்டுக்கள் வழங்கும் திட்டத்தை இம்மாதம் 28ஆம் திகதி முதல் திருகோணமலை றோட்டறி கழகம் முன்னெடுத்துள்ளது.
போஷாக்கு குறைபாடுடைய குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு இந்த பிஸ்கட்டுகள் வழங்கப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 பின்தங்கிய கிராமங்களில் இருந்து 377 குழந்தைகளும் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 237 குழந்தைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான தொடக்க வைபவம் செவ்வாய்க்கிழமை (28) பாட்டாளிபுரம் வைத்தியசாலையில் நடைபெற்றது. மூதூர் பிரதேச செயலாளர் திரு.வி யூசுப் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த வைபவத்தில், திருகோணமலை தலைவர் திருமதி கார்மன் (Ms.Carmen) அந்தோணி றோட்டறி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் மோகன் திட்டத்தை பற்றி விபரித்திருந்தார்.

13 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
29 minute ago