Kogilavani / 2015 மே 01 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கை மின்சார சபையின் கிழக்கு பிராந்திய அலவலகத்தின் புதிய கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை(30) மாலை நடைபெற்றது. இதனை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திறந்து வைத்தார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க,
'நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இலங்கை மின்சார சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனம் ஆகியவை சுயாதீன ஆணைக்குழுவினுள் உள்வாங்கப்படுமாக இருந்தால் மக்களுக்கு மேலும் பல சேவைகளை ஆற்ற முடியும். மக்களை ஒன்றிணைத்து ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் 90 வீதமாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 97 வீதமாகவும் வழங்கப்படும் மின்சாரமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்;டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலேயே குறைந்தளவு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி அங்கு கூடியளவு மின்சாரம் வழங்க நடவடிக்க எடுத்து வருகின்றோம்' என்று தெரிவித்தார்.


2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago