Suganthini Ratnam / 2015 மே 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாணசபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள், மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தால் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் நேற்று புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய பட்டதாரிகள், சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணசபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள், மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தால் அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற தமிழ்ப் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், 2011ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற எவருக்கும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு நியமனங்கள் கிடைப்பதற்கான தீர்வுகள் கிட்டாத பட்சத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் மேற்கொள்ள நேரிடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago