Thipaan / 2015 மே 06 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்தானிகர் ரொபின் மூடி கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (06) மதியம் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் அவுஸ்திரேலியா குடிவரவு குடியகல்வு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டட்டனும் பங்கு கொண்டிருந்தார்.
இரு தரப்பு உறவுகள் பற்றியும் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்வோர் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநர் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார். உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் ஆளுநருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தனர்.


14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago