Sudharshini / 2015 மே 13 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், மதவாச்சி பிரதான வீதியினூடாக கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கூலர் ரக வாகனம், திருக்கேதீஸ்வரம் சந்தியில் வைத்து இன்று புதன்கிழமை (13) விபத்தக்குள்ளாகியுள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago