Sudharshini / 2015 மே 16 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை வெள்ளிக்கிழமைகளில் நடத்த ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண முதலமைச்சரிடம்; கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடித்திலே குறித்த கோரிக்கைகை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொதுவாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் 3 மணித்தியாலங்கள் வரை நடைபெறும். எனவே, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் ஊழியர்கள் ஜும்ஆவுக்கு செல்வதில் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து சில முஸ்லிம் அதிகாரிகள் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, தாங்கள் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் என்ற வகையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு இடையூறு இல்லாத வகையில், எதிர்காலத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago