Suganthini Ratnam / 2015 மே 19 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலையிலுள்ள தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி கல்வி அமைச்சுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இலங்கை முழுவதிமுள்ள தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மத்திய கல்வி அமைச்சினால் கடந்த மாதம் கோரப்பட்டிருந்தது. ஆனால், திருகோணமலை கல்வி வலயத்திலுள்ள மூன்று தேசிய பாடசாலைகளில், அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரிஇ திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ஆகியவற்றிலேயே அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இருப்பினும், மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக மத்திய கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள்; கோரப்படவில்லை. இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் அரசியல் தலையீடு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம்.
எனவே, இம்மூன்று பாடசாலைகளிலுமுள்ள அதிபர் வெற்றிடங்களை பூர்த்திசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பொருத்தமான அதிபர்களை நியமிப்பதன்; மூலம் நல்லாட்சியை உறுதிப்படுத்தமுடியும் என்று கருதுகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 2014 டிசெம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளின் படி, அதிகளவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் மூதூர் வலயம் மாகாணத்தில் 08ஆம் இடத்திலும் கிண்ணியா வலயம் 06ஆம் இடத்திலும் காணப்படுகின்றது.
அதேவேளை, திருகோணமலை வலயம் 10ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை வலயம் இந்தளவு பின்தங்கியிருப்தற்கு இந்த வலயத்திலுள்ள கூடுதலான பாடசாலைகளில் பொருத்தமற்ற அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையே காரணமாகும்.
எனவே, மத்திய கல்வியமைச்சின் செயலாளர் இதனைக் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் கரிசனையுடன் கேட்டுக் கொள்கின்றது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago