Gavitha / 2015 மே 21 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
வாய்கால் ஒன்றில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (21) தோப்பூர் 58 பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை அன்புவழி புரம் தவராசா அஜந்தன் (வயது 20) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இவர் திருகோணமலையிலிருந்து தோப்பூர் பகுதிக்கு வியாபார நோக்கமாக சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த வாய்க்காலில் நீராடியுள்ளார். இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாய்க்காலில் வழமையாக பலர் குளிப்பர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago