Thipaan / 2015 ஜூன் 07 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமையன்று ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(07) ஏழாவது நாளாக தொடர்கின்றது.
இப்போராட்டத்தில் மூதூரைச் சேர்ந்த சமய தலைவர்கள் மற்றும் அரபு கல்லூரி மாணவர்களும் இணைந்து கொண்டு வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எஸ்எம்தஸ்லிம் மக்களின் போராட்டம் சம்பந்தமாக தெரிவித்ததாவது,
மூதூர் தளவைத்தியசாலைக்கு அத்தியட்சகராக டாக்டர் வீ. பிரேம்ஆனந் 2011ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் வைத்தியசாலைக்குரிய சத்திரசிகிச்சைகூடம், இரத்த வங்கி, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆரம்ப சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல அவசியமான பிரிவுகளை ஏற்படுத்தி இயங்கச் செய்தார்.
இதனால் இவ்வைத்தியசாலைக்கு மிகத்தூரத்திலிருந்தும் நோயாளர்கள் வருகைதர ஆரம்பித்தனர். இவ்வாறு அதிகரித்து வரும் நோயாளர்களுக்கு சேவையை வழங்கத்தக்க வகையில் இங்கு ஆளணியினரோ பௌதீக வளமோ இல்லை.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தேவைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களை நாம் பலமுறை கடிதம் மூலமும் நேரில் சென்றும் கோரிக்கை விடுத்து வந்தோம்.
அக்கோரிக்கைகளுக்கு அவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வைத்தியசாலையின் தேவைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வேறு வழியில்லாததினால் மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்களது இப்போராட்டத்தை கவனத்திற் கொள்ளாது அதிகாரத்தரப்பினர் செயற்படுவார்களாயின் இப்போராட்டம் திசைமாறி பாரதூரமான விளைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போய்விடும் என்றார்.

3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago