2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'கிராமப்புற பாடசாலைகள் புறந்தள்ளப்படுகின்றன'

Gavitha   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் நகர் புறங்களிலுள்ள பாடசாலைகளில் தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

செல்வாக்குகள் காரணமாகவே சில ஆசிரியர்கள் தேவையான இடங்களுக்கு இடம்மாற்றம் பெற்றுக்கொண்டு செல்கின்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது என்று கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு தகவல் தொழிநுட்ப அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை வலயக்கல்வி அலவலகத்தின் நித்திலம் சஞ்சிகை வெளியீடும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (23) உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'கடந்த காலங்களில் கல்வி புலத்தில் செல்வாக்கு மோலோங்கி காணப்பட்டது. இதனால் சில பாடசாலைகள் நன்மையடைய பல பாடசாலைகள் புறந்தள்ளப்பட்டன. புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்கள் தாங்கள் நியமனம் பெற்ற பாடசாலையில் கற்பிக்காது,  அதிகாரிகளின் துணையுடன் வசதியான பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

விரைவில் நியமனம் பெறவுள்ள ஆசிரியர்கள், தாங்கள் நியமனத்தின் போது குறிப்பிட்டப்பட்டுள்ள பாடசாலைகளில் குறித்த சேவைக்காலம் முடியும் வரை கடமையாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் இடமாற்றங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X