ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூலை 10 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் 400 வறிய குடும்பங்களுக்கு மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாய்கான வீட்டுக் கடன் பத்திரங்கள் இன்று (10) சேருவல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருன் சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்,சேருவில, தம்பலகாமம், அக்வப்புர, கல்மெட்டியாவ, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கே இவ் வீட்டுக் கடன் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அமைச்சியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .