2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அடுத்த சந்திப்பு திருகோணமலையில்

Editorial   / 2018 ஜூன் 09 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பை, திருகோணமலை மாவட்டத்தில், புதன்கிழமை (13) நடத்தவுள்ளதாக, காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

யுத்த காலங்களில் வட-கிழக்கு பகுதிகளில், காணமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காணாமல்போனோர் அலுவலகமானது, தனது ஆரம்ப சந்திப்புகளை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது.

இச்சந்திப்புகள் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், தனது அடுத்த சந்திப்பை, புதன்கிழமை (13) திருகோணமலையில் நடத்த தீர்மானித்துள்ளது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சேவை அமைப்புக்கள், காணாமல் போனோர் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்து காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஏழு பேரும் சந்தித்து அலுவலகத்தின் திட்டம் மற்றும் மூலோபாயங்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X