2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அமரா் தில்லைமுகிலனுக்கு நினைவேந்தல்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

நீங்களும் எமுதலாம் வாசகர் வட்டத்தின் பெளர்ணமி தின நிகழ்வு, சனிக்கிழமை (28) மாலை 4 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில், நீங்களும் எமுதலாம் ஆசிரியர் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மறைந்த மூத்த எமுத்தாளர்களான கலாபூஷணம் தா. பி. சுப்பிரமணியம் நினைவேந்தல் உரையை, கவிஞர் செ. ஞானராசாவும் அமரர். தம்பி தில்லைமுகிலன் நினைவேந்தல் உரையை, எழுத்தாளர் கனகசபை தேவகடாட்சம் மற்றும் திருகோணமலை நகரசபை உறுப்பினர் கவிஞர் தில்லைநாதன் பவித்ரன் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.

மேலும், “விதியே விதியே என் செய நினைக்கின்றாய் என் அழகிய தீவை” என்னும் தொனிபொருளில் சிறப்பு கவியரங்கு இடம்பெறும்.

இதில், நிலாவெளியூர் கெஜதர்மா தலைமையில் கவிஞர்களான மு. யாழவன்,  சௌ. சந்திரகலா, கவிச்சுடர் சிவரமணி, சூ. யூட்பேக்மன் உட்பட பலர் பங்குபற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X