2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அம்பாள் ஆலய சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா

எப். முபாரக்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, திருக்கோணேஸ்வரத்தின் ஏழு எல்லைக்காவல் தெய்வங்களில் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்ட, வரலாற்று பெருமை மிக்க பன்குளம், பறையன் குளம் அருள்மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா,நாளை (18) நடைபெறவுள்ளது .

திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பிரதித் தலைவர் சி. புலேந்திரதாஸின் வரவேற்புரையுடன் இந்நிகழ்வு இடம்பெறும்.

சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

திருகோணமலை, பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ. சோ.இரவிச்சந்திரக் குருக்களின் வழிகாட்டுதலில் நாளை (18) காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் சங்குஸ்தாபன அடிக்கல் நட்டப்படவுள்ளது.

நல்லகுட்டியாறு என்ற (தற்போது நாமல்வத்தை) இடத்தில் இருந்து காட்டு வழியாக 07 கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பெளர்ணமி தினங்களில் இவ்வாலயத்தில் வழிபாடுகள், விசேட பூசைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X