2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அழிவின் நுனியில் நடுஊற்றுக் கிராமம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 மே 06 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று கிராம சேவகர்ப்பிரிவில், புவி சரிதவியலுக்கு எதிராக, கிரவல் அகழ்ந்து எடுக்கப்படுவதால், எதிர்காலத்தில் அந்தக் கிராமம் அழிந்துவிடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுமோ என, கிராமவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இங்கு கிரவல் அகழப்படும் இடத்துக்கு அருகாமையில் இருக்கும் மக்கள் குடியிருப்புக்கும், அதனுடாக அமைந்திருக்கும் வீதிக்கும் பாரிய ஆபத்து நிகழும் அளவுக்கு, முறையற்ற விதத்தில் கிரவல் அகழ்ந்து எடுக்கப்படுகிறது என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உணவிலும், குடிநீரிலும், காற்றிலும் தூசி படிவதால் , நீண்டகால நோய்களுக்கும் சுவாச நோய்களுக்கும் ஆளாகிக் கொண்டு வருதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த கிரவல் அகழ்வுக்கு யார் அனுமதி வழங்கியது எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X