Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'நிலைத்திருக்கும் பிராந்திய அபிவிருத்திக்கான அறிவு வெளிப்பாடு' எனும் தொனிப்பொருளிலான ஆய்வு மாநாடு, வாளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில், இன்று புதன்கிழமை (14) காலை ஆரம்பமானது.
திருகோணமலை கோணேசபுரியில் உள்ள வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், அதிகளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், மலேசியா மற்றும் கொழுப்பு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
முதலில் வரவேற்புரையை வளாக முதல்வர் கனகசிங்கம் நிகழ்த்தினார். ஆய்வரங்கின் வாழ்த்துரையை கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி. ஜெயசிங்கம் நிகத்தினார். இதன் பின்னர் ஆய்வரங்கு ஆரம்பமானது.
அங்கு கருத்துத் தெரிவித்த வளாக முதல்வர்,
விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதார விஞ்ஞானம், மருத்துவம், முயற்சியாண்மை, சுற்றுலாத்துறை, பொருளியலும் விவசாயமும், சூழல் விஞ்ஞானம், மொழியும் மொழியியலும், ஊடகமும் தொடர்பாடலும், மானிடவியலும் அழகியலும் ஆகிய ஆய்வுக் களங்களைமையமாகக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டிருந்ததுடன், மதிப்பாய்வின்பின் 75 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றை இருநாள் ஆய்வரங்கில் சம்பந்தப்பட்டவர்கள் சமர்பிக்கவுள்ளனர். பிராந்திய அபிவிருத்திக்கு பங்காற்றும் அறிவை வழங்கும் வகையில், இந்த ஆய்வரங்கு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை போன்ற சிறந்த இயற்கை வளமிக்க பிரதேசம் மேலும் நிலையான அபிவிருத்தையைப் பெற்றுக் கொள்ள இந்த அரங்கு பங்களிப்பதுடன், நாட்டின் அபிவிருத்திக்குதவும் என எதிர் பார்க்கின்றோம், என வளாக முதல்வர் கனகசிங்கம் குறிப்பிட்டார்;.
இந்த ஆய்வரங்கு, வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
5 hours ago