2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆயிலடியில் நடமாடும் சேவை நாளை

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்களின் நலன்கருதி, கிண்ணியா, ஆயிலியடி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கிண்ணியா பிரதேச செயலகத்தால், நடமாடும் சேவையொன்று, நாளை (01) நடத்தப்படவுள்ளது.

இதுவரைக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், புதிப்பிக்கவுள்ளவர்கள், முதியோர் அடையாள அட்டை, புகைப்படம், முத்திரை, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் ,பொலிஸ் முறைப்பாடு போன்ற அனைத்தையும், இந்நடமாடும் சேவையின் மூலம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், காணிப் பிரச்சினைகள், புதிய அனுமதி (பெர்மிட்) விண்ணப்பங்களும் இதில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. மேலும், காணிப் பிரச்சினைகள் சம்பந்தமான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு, இதுவரை பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை விண்ணப்பிக்க முடியுமென்பதோடு, இறப்பு, பிறப்பு, திருமணச் சன்றிதழ் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்படுகிறது.

பொதுஜன உதவிப் பணம் கோர விண்ணப்பித்தல், விசேட தேவையுடையோர் போன்றவர்களின் பிரச்சினைகள், தொடர்ச்சியாக நோயுற்றோர் பிரச்சினைகள், சுயதொழில் பிரச்சினைகளும் இதன்போது தீர்த்து வைக்கப்படவுள்ளன. அத்தோடு, 70 வயதுக்கு மேற்பட்டோர், கொடுப்பனவுக்காகவும் இங்கு விண்ணப்பிக்க முடியும்.

சிறுவர், மகளிர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகள், ஓய்வூதியப் பிரச்சினைகள், மகளிர் அபிவிருத்திச் சங்கம் தொடர்பான பிரச்சினைகளும், அனர்த்தங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் போன்ற சேவைகள், மக்களுக்காகவே நடத்தப்படவுள்ளதால், அனைவரும் வந்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு, ஆயிலியடி கிராம உத்தியோகத்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X