அப்துல்சலாம் யாசீம் / 2018 மார்ச் 29 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, வான்எல ஆயுர் வேத மத்திய மருந்தகம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால், நேற்று (29) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜம்பத்தி மூன்று இலச்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தை, மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டுமெனவும் கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதுடன் வீதி, குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஷார், திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் ஆர்.சிறிதர், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வான்எல பிரதேசத்திலுள்ள மக்கள், தங்களுக்கு ஆயுர் வேத வைத்தியத்துக்காக திருகோணமலை அல்லது கந்தளாய் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு அக்கிராமமக்கள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண சுதேச மருத்துவ ஆணையாளருக்குக் கூடிய விரைவில் மத்திய மருந்தகத்தை அமைக்குமாறு ஆலோசனை வழங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025