அப்துல்சலாம் யாசீம் / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்குமிடையிலான கலந்துறையாடல், ஆளுநர் அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்றது.
இக்கலந்துறையாடலின் போது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களான அமறூத் ஜவ்ரா மற்ரக்பீர, பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சிங் ஜவ்ரா, சிங்கப்பூரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர்கள், முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த இக்குழுவினர், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் இயற்கையை மையமாகக்கொண்ட ஒன்றிணைந்த உல்லாசப் பிரயான அபிவிருத்தி வலயத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
அத்துடன், விவசாய, கால்நடைத்துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றித்தை ஊக்குவிப்பதின் ஊடாக, இத்துறைகளின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரித்து, முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
மேலும், புல்மோட்டை கனிய வள கூட்டுத்தாபனம், உப்புவெளி பிராந்திய கால்நடை பண்ணை ஆகியவற்றையும் இக்குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பொது முகாமையாளர் டொக்டர் ஞானசேகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026