George / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத இருவரை இம்மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றத்தின் நீதவான் ஏ.எம். ஹம்ஸா நேற்று (20) உத்தரவிட்டார்.
நல்லூர், தோப்பூர பகுதியைச் சேர்ந்த 50, 55 வயதுடைய சந்தேக நபர் இருவருமே இவ்வாறு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் 2014ம் ஆண்டு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய வழக்கு, திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்துள்ளனர். இதனால் இவ் இருவரையும் புதன்கிழமை (19) இரவு கைது செய்ததாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) முன்னிலைப்படுத்தியப்போது, நீதவான் ஏ.எம். ஹம்ஸா விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
23 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
2 hours ago