Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகப் போரின்போது திருகோணமலை கடற்பரப்பில் மூழ்கிய பிரித்தானிய சரக்குக் கப்பல், பெரும் போராட்டத்திற்கு மத்தியில் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
1924ஆம் ஆண்டு டிசெம்பர் 24ஆம் திகதி சேவைக்கு விடப்பட்ட எஸ்.எஸ். சகாயிங்க் என்ற புகழ்பெற்ற இந்த 138 மீற்றர் நீளமான சரக்குக் கப்பல், 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 09ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றிருந்தபோது, ஜப்பானின் குண்டு வீச்சு விமானத் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் மூழ்கிப்போனது.
இந்தக் கப்பல் திருகோணமலை துறைமுகப் பகுதியில் சுமார் 35 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல மாத போராட்டத்தின் பயனாக இலங்கை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் தற்போது கடற்பகுதியின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கப்பலை கடலின் மேற்பரப்பிற்கு கொண்டுவரும் பணிகள் கிழக்கு கடற்படையின் சுழியோடிக் கட்டளை அதிகாரி கப்டன் கிரிஷாந்த அதுகோறளையின் தலைமையில் 98 கடற்படைச் சுழியோடிகளினால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago