Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 13 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தின் தென்னைமரவாடிப் பகுதியின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல், புல்மோட்டை பொது நூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) ஓய்வுபெற்ற கிராம அதிகாரி முகம்மட் சலாம் தலைமையில் நடைபெற்றது.
பழைய வர்த்தகமாணி அறிவித்தலின்படி நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் மற்றும் பதவிசிறிபுர பெரும்பான்மை மக்களின் சிலர் எதிர்பார்ப்புடன் புல்மோட்டை பிரதேசத்தின் முஸ்லிம்களின் காணி மற்றும் தென்னைமரவாடி போன்ற பகுதிகளின் உள்ள பொது மக்களின் காணிகளை பெற்றுக்கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் குச்சவெளிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.தௌபீக், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.சமது மௌலவி மற்றும் புல்மோட்டை பெரிய பள்ளிவாயல்களின் தலைவர் கலில் மௌலவி உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago