Niroshini / 2017 மே 20 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தில், 2 மாதத்துக்கு மேல் நீர் கட்டணம் செலுத்தாதோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் கட்டணம் 1,000 ரூபாய்க்கு மேல் நிலுவையில் வைத்திருப்போருக்கே, இந்தத் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, முன்கூட்டியே கட்டணத்தை செலுத்தி இத்துண்டிப்பு நடவடிக்கையை தவிர்த்துகொள்ளுமாறு, வடிகாலமைப்பு சபையினர் கோரியுள்ளனர்.
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago