Princiya Dixci / 2017 ஜனவரி 29 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா, பூவரசந்தீவுப் பகுதியில் 1 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, இன்று (29) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் அதை இடத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.ஹைத் (வயது 58) எனத் தெரியவருகின்றது.
திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வீட்டைச் சுற்றி வளைத்த போது, விற்பனைக்காக வீட்டுக்குள் வைத்துக் கஞ்சாவைப் பொதி செய்து கொண்டிருக்கும் போது, குறித்த நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரை, திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago